தமிழகத்தில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் புராணங்களின் அடிப்படையிலும் , அதிசயத்தின் அடிப்படையிலும் அமைந்திருக்கும். அப்படிபட்ட ஆலயத்தின் ஆச்சரியம் தரும் அதிசய ஆன்மீக தகவல்களை காணலாம்.
1)கடலுக்கு 3500 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.
2) ஈரோடு மடவிளாகம் கோவில் குளத்தில் , 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது
3) தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.
4) ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமனுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் உள்ளது.
5) சுசிந்தரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காது வழியாக வருகிறது.
கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.
6) கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிக்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும் , சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.






0 Comments: