சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம், சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.
இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் விபரீத முடிவு எடுத்திருக்கிறார்.



0 Comments: