Friday, July 3, 2020

முதல் முறையாக இந்தியாவில் covid-19 தடுப்பூசி

பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் உடன் ICMR இணைந்து ஆகஸ்டு 15 ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படலம் என்று அரசாங்கத்தின் உயர் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.


புனேவில் அமைந்திருக்கும் ICMR நேஷனல் இன்ஸ்டிடியூட் வைரலாஜி உடன் BBL இணைந்து செயல்படுகிறது என்று ICMR நிறுவனங்களுக்கு எழுதிய  கடிதத்தில் தெரிவித்துள்ளது.இந்தியாவின் சுதந்திரம் தினமான ஆகஸ்ட் 15 முன் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தும் என்று ICMR கூறியுள்ளது.


மருத்துவ சோதனை தளங்களின் ஒத்துழைப்பு பொருத்து கூறமுடியும் அதுமட்டுமில்லாமல் 
சுதந்திரம் தினத்திற்கு முன்னரே தடுப்பூசி வெளியிட திட்டமிட்டுள்ளேம் என்று ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்த  திட்டத்திற்கு   மருத்துவ சோதனைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள், விசாகப்பட்டினம், ரோஹ்தக், புதுதில்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடக), நாக்பூர்,
கோரக்பூர்,கட்டங்குலாதூர்(தமிழ்நாடு),ஹைதராபாத்,ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவாவில் உள்ளன.


உலகில் உள்ள அனைத்து நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளிகள் வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தாலும். இன்று வரைக்கும்ஒரு தடுப்பூசி கூட அங்கீகரிக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமான செய்தி ஆகும்
Previous Post
Next Post

0 Comments: