தமிழனின் பெருமையை சொல்ல ஒரு பிறவி போதாது, அவர்கள் இயற்றிய இலக்கியங்களும், சங்க நூல்கள் பெருமை வாய்ந்தது. அதில் எங்களுக்கு தெரிந்த சில இலக்கியங்கள் மற்றும் நூல்கள் இந்த உரையில் பார்ப்போம்.
பக்தி இலக்கியங்கள்
1)தேவாரம்
2)திருவாசகம்
3) திருமந்திரம்
4)திருவருட்பா
5) திருப்பாவை
6) திருவெம்பாவை
7) திருவிசைப்பா
8) திருப்பல்லாண்டு
9)கந்தர் அனுபூதி
10)இந்த புராணம்
11)பெரிய புராணம்
12) நாச்சியார் திருமொழி
13)ஆழ்வார் பாசுரங்கள்
பக்தி இலக்கியத்தில் உள்ள ஒவ்வொன்றும் மிக சிறந்த இலக்கியங்கள்.ஒவ்வொரு இலக்கியத்தில் மிகச் சிறந்த பாடலை மட்டும் காண்போம்.
தேவாரம்
தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.
பாடல்
காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பொருள்
காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி, சுடு காட்டில் உள்ள சாம்பலை உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான் அவனே
என்று கூறி அருளினார்.
திருவாசகம்
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பாடல் ;
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
கோழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன்
அடி வாழ்க
பொருள்
நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.
நன்றி


0 Comments: