Monday, July 6, 2020

பெண்களின் யோனியை வணங்கும் கோயில்#13

நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சடங்கு மற்றும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

   

இந்த காலகட்டத்தில் மாதவிடாய் என்பது தீட்டு என்று பெரியோர்களால் கூறப்படும் விஷயம் ஆகும். ஆனால் பெண்களின் யோனியை வணங்கும் கோயில் உள்ளது.அந்த கோயிலியின் பெயர் காமாக்ய கோயில் ஆகும்.

                 

இந்த கோயில் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் 12 கிலோமீட்டர் தொலைவில்  நீலாச்சல் மலையில் 700 அடி உயரத்தில் உள்ளது.

             

51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. மகா வித்யாதேவிகளின் பத்து கோவில்களில் மூன்று கோவில்கள் காணப்படுகின்றன. அவை திரிபுர சுந்தரி ,மாதங்கி , கமலா தேவி கோவில்களும் மற்ற கோவில்கள் தனித்தனியாக அமைந்துள்ளது.

இதில் சக்தி பீடம் என்பது சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடத்தை குறிக்கும். 


சிறுகதை:

               இந்த கதையில் சக்தி என்பவர் தாட்சாயணி ஆவார்.

இவரின் தந்தை தட்சனால் நடந்த யாகத்தில் அவமதிக்கப்பட்டதால் அந்த யாகத்தில் தன்னுயிரை விட்டாள். இதை அறிந்த சிவன் தன்னுடைய மனைவியின் எரிந்த உடலை தூக்கி செல்வார். அந்த உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்கள் கீழே விழுந்தன . அப்படி தான் சக்தியின் யோனி விழுந்த இடம்தான் இந்த காமாக்ய கோயில்.




இந்த கோயில் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே கட்டப்பட்ட கோயில் 11 ம் நூற்றாண்டில் போர் காரணத்தால் உண்மையான கோயில் அழிக்கப்பட்டது.அதற்கு பின் 16 ம் நூற்றாண்டில் பீகார் அரசர் நரநாராயன அவர்கள் புதுப்பித்து கட்டினார் ‌.

                  

கோவில்கள் என்றாலே ‌சிலைகள் இருக்கும் ஆனால் இந்த கோயில் சிலைகள் இல்லை அதற்கு பதிலாக ஒரு பாறையில்  யோனியை வடிவமைத்து தெய்வமாக வழிபடுகின்றனர்.

 

             

இந்த கோயில் முக்கிய விழா அம்புபச்சி மேளா என்ற விழா சிறப்பாக இருக்கும்.கும்ப மேளா விழாவில் நீராடினால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் அம்புபச்சி விழாவில் கிடைக்கும். வட மாநிலத்தில் உள்ள நிர்வாண நாகா சாதுக்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் கருவறையை அடைத்து விடுவார்கள். மூன்று நாள்கள் தேவி குளிப்பாட்டி சிகப்பு ஆடை அணிந்து  பூக்கள் மற்றும் பழங்கள் வைத்து வழிபடுவார்கள்.


                              "நன்றி "


Previous Post
Next Post

0 Comments: